சென்னை:
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், ஊரடங்கை மே 17ந்தேதி வரை தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ‘வீட்டிலேயே இருங்கள்’ என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைடுத்து பல்வேறு உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.
தடை நீட்டிக்கப்படும் செயல்கள் விவரம்:
தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை 11 செயல்பாடுகளுக்கு தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உளளது. அதன்படி, 11 செயல்பாடுகளுக்கு தடை நீடிக்கும் என்றும் கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
3. திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
5. பொது மக்களுக்கான விமான, இரயில், பொது பேருந்து போக்குவரத்து.
6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்சா.
7. மெட்ரோ இரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
8. மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து.
9. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
10. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
11. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும்.
கொ ரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வரின் அறிக்கை முழு விவரம்: