அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.
இந் நிலையில்,நாட்டிலே அதிக அளவாக குஜராத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 22 பேர் பலியாகி இருக்கின்றன. மொத்தமாக 326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.
326 பேரில் அகமதாபாதில் மட்டும் 267 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக குஜராத்தில் மட்டும் 4721 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அம்மாநிலத்தில் அதிகளவாக இளைஞர்கள் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel