சென்னை: தமிழகத்தில் மானியமில்லாத வீட்டு சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.192 குறைந்தது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3ம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் வரும் 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மே 3க்கு பிறகு ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில், கடந்த ஆகஸ்டுக்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3வது மாதமாக குறைந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஏப்ரலில் ரூ.761.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.569.50 ஆக குறைந்துள்ளது. ஆகையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இது வரை ரூ.1404 ஆக இருந்தது. இப்போது ரூ.259.50 குறைந்து, ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மானிய விலை சிலிண்டராக இருந்தாலும், மானியத்தை கழிக்காமல் முழு தொகையையும் அளித்துத்தான் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வாங்க வேண்டும். பின்னர், மானியத்தொகை, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Patrikai.com official YouTube Channel