சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வகுப்பறைகளை கொரோனா வார்டுகளை மாற்ற தமிழகஅரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel
அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிடவும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டு உள்ளது.