தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் சென்னையின் 16 மண்டலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 104 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 94 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. ஒரேநாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் 138 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் இன்று 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து, இதுவரை வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1258 ஆக உயர்ந்துள்ளது.
இன்று எந்தவொரு பலி எண்ணிக்கையும் இல்லாத நிலையில், பலி எண்ணிக்கை 27 ஆக தொடர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 138 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேருக்கும், மதுரையில் 5 பேர், இராமநாதபுரம் 3, பெரம்பலூர் 2, அரியலூரில் 1, கடலூர் 1, காஞ்சிபுரம் 1, ராணிப்பேட்டை 1, சேலம் 1 உள்பட 161 பேர் கொரோனாவுல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.