டில்லி:

தன்னாட்சி பெற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியதை மத்தியஅரசு முடக்கி, மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக மோடி அரசு தமிழக விவசாயிகளின் வயிற்றில் மீண்டும் அடித்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த  நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில்,  தமிழக அரசின் வழக்கையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச்  மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்பு மிக்க  தீர்ப்பு வழங்கியது.

ஆனால், தற்போது அதை தீர்ப்பை குழிதோண்டி புதைத்து நடவடிக்கை எடுத்துள்ளது மோடி அரசு. தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய அரசின் நீர்வளத்துறையான ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்து, அதிகாரமற்ற அமைப்பாக மாற்றி, அதன் செயல்பாடுகளை முடக்கி உள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்பில், தமிழகம் கர்நாடகம் இடையே நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கே உள்ளது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித் திருந்தது. மேலும்,  அதைத் தொடர்ந்து பருவமழை தொடங்குவதற்கு முன்னனே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதுகுறித்து அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவித்து  உத்தரவிட்டது.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி, காவிரி நதி நீர் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்ளும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில்,கர்நாடகம்,  தமிழகம், புதுவை, கேரளா ஆகிய  மாநிலங்களுக்கு இடையே உள்ள  காவிரி நீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில்,  காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை த்திய அரசு அமைத்தது.

இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் தொடர்பான அனைத்து விவரங்களையும் கவனிக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக உருப்பெற்றதாக தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகள் மற்றும் அரசின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக சந்தோசப்பட்டனர்.

ஆனால், தற்போது விவசாயிகளின் சந்தோஷத்தில் மண்ணை வாரிப்போட்டுள்ளது மோடி அரசு.

ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தனித்தலைவரை நியமிக்கக்கோரி தமிழக அரசு பலமுறை மத்தியஅரசிடம் வலியுறுத்தியும் அதை கண்டுகொள்ள மோடி அரசு, மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவரையே காவிரி ஆணையத் தலைவராக நியமினம் செய்து கவனித்து வந்தது.

பலமுறை இதுகுறித்து தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில், அதை காதில் போட்டுக்கொள்ளாத மோடி, அரசு தற்போது தமிழக விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பதற்கு பதில் ஆசிட் ஊற்றி உள்ளது.

இந்த நிலையில், தற்போது காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், அதை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இதனால், காவிரி மேலாண்மை ஆணையம் அரசியல் கலப்பிடமில்லாத, தன்னிச்சையான ஆணையம் என்ற சிறப்பை இழந்துள்ளது.

ஏற்கனவே காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கிய மோடி அரசு தற்போது காவிரி ஆணையத்தையும் முடக்கி, தமிழகத்துக்கு காவிரி நீர் வருவதை தடுக்கும் முயற்சியாக, கர்நாடக பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.

மக்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்காதவாறு, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அரசாணையை வெளியிட்டு உள்ளது.

காவேரி மேலாண்மை ஆனையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்திற்குள் கொண்டுவந்தது மத்திய அரசு.

சுதந்திரமான, தன்னிச்சையான மேலாண்மை வாரியத்திற்கான தமிழகத்தின் 25 ஆண்டுகால போராட்டத்தை கேலிக்குரியதாகக்கி உள்ளது மத்திய அரசு…

இது தமிழக மக்களுக்கு மோடி அரசு இழைத்துள்ள  மாபெரும் துரோகம்…

எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு என்ன செய்யப்போகிறது…

மோடி அரசுக்கு எதிராக, தமிழக அமைச்சரவை ராஜினாமா செய்யுமா?