மும்பை: கொரோனாவால் 3 காவலர்கள் இறந்ததால் மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது.
மும்பையில் 5,500 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன, மேலும் இறப்புக்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, கோவிட் 19க்கு எதிராக கடும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில், கொரோனாவால் 3 காவலர்கள் இறந்ததால் மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை அவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் மட்டும் 3 நாட்களில் 3 போலீசார் உயிர் இழந்தனர்.
இதையடுத்து மும்பை காவல்துறைத் தலைவர் பரம் பிர் சிங் இந்த முடிவை செய்தார். பலியான மூன்று பேரும் 50க்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.