உணவு அளித்த பள்ளிக்கு அலங்காரம்…  ஓவியர்களின் அசத்தலான  நன்றிக்கடன்..

ஈரோடு மாவட்டத்தில் ரொம்ப நாட்களாகச் செயல்பட்டு வருகிறது. ’தாய்மை அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனம் .

ஊரடங்கில் திசை தெரியாமல் தவித்த 70 பேருக்கு அந்த அறக்கட்டளை அடைக்கலம் கொடுத்து அங்குள்ள இரு பள்ளிகளில் தங்க வைத்திருந்தது.

இரு பள்ளிகளையும், அந்த அறக்கட்டளை தான் பராமரித்து வருகிறது.

மூன்று நேரமும் அவர்களுக்குச் சாப்பாடு ’டான்’ என்று வந்து இறங்கும்.குடிநீர் போன்ற வசதிகளுக்கும் குறைச்சல் இல்லை.

சும்மாவே இருப்பது, அவர்களுக்கு போர் அடித்தது.

தங்களை வாழ வைக்கும் , அந்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தனர்.

அந்த 70 பேர் கூட்டத்தில் சில பெயிண்டர்களும் இருந்தனர்.

’அழுக்கடைந்து காணப்படும் இரு பள்ளிகளையும் சுத்தம் செய்து, ஜோராக வண்ணம் தீட்டலாமே?’’ என்று அந்த பெயிண்டர்கள் சொன்ன  ஐடியாவை-

மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

தாய்மை அறக்கட்டளை, உடனடியாக பெயிண்ட் டப்பாக்கள், பிரஷ்களை கொண்டு வந்து குவித்தது.

பெயிண்டர்கள் தூரிகைகளைக் கையில் எடுக்க, மற்றவர்கள் பள்ளி வளாகம் மற்றும் சுவர்களை அழகாக்கி மெருகூட்டினர்.

இரு பள்ளிகளும் இப்போது, வி.ஐ.பி.வருகைக்கு காத்திருக்கும் கட்டிடங்கள் போல்,வண்ணத்தில் ஜொலிக்கின்றன.

– ஏழுமலை வெங்கடேசன்