இந்தூர்:

த்தியபிரதேச மாநிலத்தில் கொரோனாவில் உயிரிழந்த இஸ்லாமியரின் உடலுக்கு அந்த பகுதியைச்சேர்ந்த இந்து இளைஞர்கள் இறுதிமரியாதை செய்து நல்லடக்கம் செய்தனர். இந்த நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் மாநிலங்களில் மத்தியபிரதேச மாநிலமும் ஒன்று. இங்குள்ள இந்தூர் பகுதியில்  கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இருந்தாலும் இந்தூர் பகுதியில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,   இந்தூர் ஆரோபிந்தோ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த இஸ்லாமிய  நபர் ஒருவர் உயிரிழந்தார். ஆனால், அவரது உடலை அடக்கம் செய்ய அவர்களது குடும்பத்தினர் முன்வராத நிலையில், அந்த பகுதியைச்சேர்ந்த நான்கு இந்து இளைஞர்கள் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இந்த சோக நிகழ்வு அந்த குதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டடிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தூரில் ஏற்கனவே கடந்த 8ந்தேதி கொரோனாவால் இறந்த இந்துபெண் ஒருவரின் உடலை இஸ்லாமிய இளைஞர்கள் தூக்கிச்சென்று இறுதிச்சடங்கு செய்தது குறிப்பிடத்தக்கது.