டெல்லி

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கே.எல.ராகுல் குழந்தைகள் நலனுக்காக தனது கிரிக்கெட் பொருட்களை ஏலம் விட்டு 8 லட்சம் நிதி திரட்டியுள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி சாதனை படைத்து வரும் ராகுல், சமூகப் பணியிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

கொரோனாவால் பல குழந்தைகள் உணவின்றி தவித்து வருவதால் இந்த ஏலம் மூலம் கிடைத்த தொகை அதற்குப் பயன்படும் என அவர் தெரிவித்தார்.

பாரத் ஆர்மி அமைப்புடன் இணைந்து இந்த ஏலம் நடத்தப்பட்டது.

ராகுல் பயன்படுத்திய பேட் ரூ 2,64,228, ஒருநாள் போட்டியில் அவர் அணிந்திருந்த ஜெர்சி ரூ 1,13,240, டெஸ்ட் போட்டியில் அணிந்திருந்த ஜெர்சி ரூ 1,32,774,  டி20ல் அணிந்திருந்த  ஜெர்சி ரூ 1,04,824, ஹெல்மெட் ரூ 1,22,677 என மொத்தம் ரூபாய்  8 லட்சம் ஏலம் மூலம் திரட்டப்பட்டது.

இந்த நலப்பணியில் அனைவரின் பங்களிப்பும் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே ஏலம் விடப்பட்டது எனத் தெரிவித்த ராகுல், கொரோனா காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளார்.