சென்னை: கல்லுாரி படிப்பில் மொத்தம் 6 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி.

கல்லுாரி பாடங்களில் உள்ள அம்சங்களை செயல்படுத்தும் விதமாக, கற்றல் வெளிப்பாடு திட்டத்தில், புதிய பாடத்திட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உருவாக்கி வருகிறது.

இந்த வரிசையில், இயற்பியல், கணிதம், ஆங்கிலம், மானுடவியல், உளவியல், நுாலக அறிவியல், தாவரவியல், புள்ளியியல், ஊடகவியல் போன்ற 19 பாடங்களுக்கு, ஏற்கனவே புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சட்டம், தொல்லியல், சமஸ்கிருதம், பாதுகாப்பு தொடர்பான படிப்பு, வேதியியல் மற்றும் விலங்கியல் ஆகிய படிப்புகளுக்கு, புதிய பாடத்திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு www.ugc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.