மும்பை: பிரிட்டனைச் சேர்ந்த ஃபராடியன் லிமிடெட் என்ற உற்பத்தி நிறுவனம், தனது விற்பனை மையத்தை விரைவில் இந்தியாவில் துவக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்மூலம், சீனாவின் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு, இந்தியா சவாலாக விளங்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இந்த நிறுவனத்தின் தயாரிப்பான சோடியம்-அயன் தொழில்நுட்பம், பாரம்பரிய லித்தியம்-அயன் பேட்டரிகளைவிட சிறப்பானது என்று கூறப்படுகிறது.
சோடியம்-அயன் பேட்டரிகள், ஆட்டோமொபைல், சேகரிப்பு மற்றும் மொபைல் தொழில்துறைகளில் பெரிய மாறுதலை உண்டாக்கியுள்ளன என்று கூறப்படுகிறது.
லித்தியம்-அயன் பேட்டரிகளோடு ஒப்பிடுகையில், சோடியம்-அயன் பேட்டரிகள், தெர்மல் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதாக ஃபராடியன் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. மேலும், அவற்றைப் பாதுகாப்பாக இடம்மாற்ற முடிவதோடு, ஜீரோ வோல்ட்டிலும் பராமரிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சோடியம்-அயன் தொழில்நுட்பம், செலவின அடிப்படையிலும், லித்தியம்-அயன் பேட்டரிகளைவிட குறைவானது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், சீனாவிற்கு, இந்தியாவிலிருந்து புதிய சவால் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.