டில்லி

டில்லி நகரில் பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 160 பேருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைர்ஸ் பரவுதல் பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை.  சமீபத்தில் சென்னையில் 28 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா உள்ளது உறுதியானது. இதனால் மும்பையில் 171 பேருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் 53 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா இருந்தது உறுதி ஆனது.

இது நாடெங்கும் உள்ள பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.   தற்போது கொரோனா பாதிப்பில் டில்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.  இங்கு 2376 பேர் பாதிக்கப்பட்டு 50 பேர் உயிரிழந்துள்ளனர்.  எனவே இங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக டில்லியில் 160 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  அதன் முடிவுகள் இன்றுவெளியாகின்ன.  அந்த முடிவுகளின்படி பரிசோதனை செய்யப்பட்ட 160 பத்திரிகையாளர்களில்  ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது.