உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது.
சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது இந்த கொடிய வைரஸ்.
ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சுழட்டி அடிக்கும் கொரோனா வைரஸிற்கு உலகின் பல முன்னணி நடிகர்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து ஹாலிவுட் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலர் இந்த கொடூர நோய்க்கு எதிராக போராடி வரும் நிலையில், புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக புகழ் பெற்ற ராப் இசை கலைஞரான ஃப்ரெட்ரிக் தாமஸ் என்பவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராப் இசை உலகின் முக்கிய நபரான பிரடெரிக் தாமஸின் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 35 வயதான பிரடெரிக்கின் திடீர் மரணம் இசை உலக ஜாம்பவான்கள் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.