டெல்லி:

காராஷ்டிரா  மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 6,430-ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 283 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமானோர் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,700 -ல் இருந்து 23,077 -ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 681-ல் இருந்து 718 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பரவலில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அதையடுத்து, குஜராத், தெலுங்கானா, தமிழகம் போன்ற மாநிலங்களில் தொற்று தீவிரமாகி வருகிறது.

மகாராஷ்டிரம் மாநிலம் கொரோனாவால் சூழப்பட்டுள்ள நிலையில், மும்பையில் பாதிப்பு கடுமையாக உள்ளது.

அங்கு  இதுவரை  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6430-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கு 840 பேர் குணமடைந்துள்ள நிலையில் 283 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் மேலும் 217 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த  எண்ணிக்கை 2,624 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் 2,376 போ, ராஜஸ்தானில் 1,964 போ, மத்தியப் பிரதேசத்தில் 1,699 போ, உத்தரப் பிரதேசத்தில் 1,510 போ சிகிச்சையில் உள்ளனா்.