மெக்கா

மிகக் குறைவான ஆட்களுடன் மெக்கா மசூதியில் ரம்ஜான் பிரார்த்தனைகள் நடந்துள்ளன.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகக் கடுமையாக உள்ளது.  பல நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மத தலங்கள் மூடப்பட்டுள்ளன.  சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா உள்ளது. கொரோனா பரவுவதால் இங்கு மாதா மாதம் நடைபெறும் உம்ரா பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் ரம்ஜான் மாத விரதம் நடைபெற்று வருகிறது.   மெக்கா மற்றும் மதினாவில் அமைந்துள்ள பெரிய மசூதிகளில் ரம்ஜான் பிரார்த்தனைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  மக்கள் யாரும் வராமல் தடுக்க இவ்வாறு தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் சௌதி கஸெட் தனது டிவிட்டரில் முதல் ரம்ஜான் பிரார்த்தனைகள் நடைபெற்றதாகப் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன  மிககுறைவான ஆட்களுடன் நடந்த இந்த பிரார்த்தனையில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.