டெல்லி

கிரிக்கெட் விளையாட்டில் மகேந்திர சிங் தோனியே மிகச் சிறந்த ஃபினிஷர் என முன்னாள் கிரிக்கெட்டர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டா வழியே ரசிகர்களுடன் உரையாடிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட்டர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளருமான மைக்கேல் ஹஸ்ஸி தோனியுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

“நான் பார்த்த வரை கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஃபினிஷர் சிஎஸ்கே கேப்டன் தோனி தான். எந்த பந்து வீச்சாளரை டார்கெட் செய்ய வேண்டும் என்பதை மிகச் சிறப்பாக கணிப்பார்.

அது மட்டுமல்லாமல் எந்த பந்து வீச்சாளரிடம் அதிரடியாக ஆடமுடியும் என்பதை கணித்து அதற்கேற்ப அடித்து ஆடுவார்.

போட்டியில் எப்படி வெல்லலாம் என்பதையும் அவரே கணத்து விடுவார். இந்த சிறப்புத் தன்மைகள் தான் தோனியை மிகச் சிறந்த ஃபினிஷர் ஆக உருவாக்கியுள்ளது.

மேலும் தற்போதும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு ஏற்ற உடற்தகுதியுடன் தோனி இருக்கிறார்” என ஹஸ்ஸி கூறினார்.

11 ஆண்டுகளில்  சரியாக விளையாடவில்லை என  இரண்டு முறை மட்டுமே அணியினர் மீது தோனி கோபம் கொண்டதாக ஹஸ்ஸி தெரிவித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.