டெல்லி

அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தன் மனைவி ரித்திகாவே  தான் சாதனைகள் செய்ய பக்கபலமாய் திகழ்பவர் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி சூழலால் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சமூக வலைதளங்கள் வழியே மனதிற்கு பிடித்தவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் டிவிட்டர், இன்ஸ்ட்டா உள்ளிட்ட வழியே ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இணைய உரையாடலில் ரோகித் ஷர்மா தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் தன் மனைவி ரித்திகா பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

“என் பலம் என் மனைவி ரித்திகா தான். என்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதையே அவர் விரும்புவார். என் சாதனைகளுக்கு பக்க பலமாக திகழ்பவரும் அவரே” எனக் குறிப்பிட்டார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை நினைவு கூர்ந்த ரோகித்,

“2019 உலகக் கோப்பையை என்னால் மறக்கவே முடியாது. என் ஒட்டுமொத்த குடும்பமும் இங்கிலாந்து கிரிக்கெட் அரங்கில் இருந்தது தான் அதற்கு காரணம். உலகக் கோப்பையில் நான்கு சதங்கள் அடிக்க ரித்திகாவும் என் மகளுமே காரணம்” எனவும் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.