துபாய்: உலகின் சிறந்த டி-20 அணி ஒன்றை, தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யுமாறு தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது ஐசிசி.
தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது ஐசிசி. மேலும், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியின் புகைப்படமும் வெளியிடப்பட்டது.
“ரசிகர்களே, உங்கள் காலத்தில் விளையாடிய, உங்களுக்குப் பிடித்த சிறந்த வீரர்களை, அணிக்கு ஒருவர் என்பதாக தேர்வுசெய்து, அணியை உருவாக்கவும்” என்று ஐசிசி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் பலர், தங்களுக்குப் பிடித்த வீரர்களைக் கொண்டு அணியை தேர்வு செய்தனர். பலர் விராத் கோலியை தேர்வுசெய்து கேப்டனாகவும் நியமித்துள்ளனர்.
சிலர் ரோகித் ஷர்மாவை தேர்வுசெய்துள்ளனர். மேலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் பாபர் ஆஸம், தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், இலங்கையின் மலிங்கா, ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் உள்ளிட்டவர்களையும் தேர்வு செய்தனர்.