சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனை தெரிவித்தனர்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து,இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 20, 2020
“கொல்லும் கரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மைக் காக்கப் போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையைத் தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.”
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்