சென்னை
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 105 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆயினும் கொரோனா தொற்று குறைந்த பாடில்லை
தமிழக அரசு சுகாதாரத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று மட்டும் 105 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இத்துடன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel