நைரோபி :
நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படத்தில் பள்ளியில் இடம் கொடுக்க மறுத்ததால் அந்த பாடசாலைக்கே ஒரு ஏழை சிறுவன் தீவைத்து பிடிபடுவான் அரசவையில் அவன் உண்மையை பேசும்போது, கர்ணனாக வரும் சிவாஜி நெகிழ்ந்துபோய், என் இனமடா நீ என்று சிறுவனை புகழ்வார்.
இப்படித்தான் கென்யா நாட்டில் ஒரு ஆளுநரை பார்த்து மதுப்பிரியர்க்ள், என் இனமடா நீ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விஷயத்திற்கு வருவோம்.
கொரோனாவால் உலகம் முழுவதும் வீட்டுக்குள் முடங்கிப்போயுள்ள மக்களுக்கு அரசாங்கங்கள் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கென்யாவின் தலைநகரான நைரோபியில் ஆளுநராக உள்ள மைக் சோன்கோவும் தம் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார்.
அதன்படியான அத்தியாவசிய பொருட்களுக்கு மத்தியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மதுபாட்டில்கள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆளூநர் கொன்கோவின் உத்தரவின் பேரிலேயே அவை சேர்க்கப்ப்டடதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுப்பிரியர்களோ, பருத்தி வேட்டியாவே காய்த்துபோல் இன்னாது ஒசியிலேயே சரக்கா என்று மலைத்துப்போனார்கள்.
இன்னொரு பக்கம் பெரும் சர்ச்சை வெடித்த நிலையில் ஆளுநர் அளித்த அருமையான விளக்கம் இதோ,. ‘’ கொரோனா அறிகுறியில் மிகமுக்கியமானது தொண்டை வலி. அதற்கு நான் சொன்ன சரக்கு இதமாக மக்களுக்கு நிவாரணத்தை தரும். உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், மது என்பது கொரோனா வைரஸசுக்கு எதிராக வேலை செய்யும் என்று சொல்லியிருப்பதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் இதில் ஒன்றும் தப்பில்லை’’
நைரோபி மாநகர ஆளுநரின் கொன்கோவின் இந்த விளக்கம், கென்யா முழுவதும் உள்ள மதுப்பிரியர்களை கொண்டாடவைத்துள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனமோ, ஐயகோ, மது அருந்தினால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்று சொன்னோமே தவிர, மதுவால் தொண்டைவலிக்கெல்லாம் நன்மை என்று நாங்கள் சொல்லவேயில்லை என்று கதறியது.
இன்னொரு பக்கம் ஆளுநர், பரிந்துரை செய்த குறிப்பிட்ட சரக்கு பிராண்டு கம்பெனியே அலறிப்போனது.. யெப்பா புண்ணியவான்களே, எங்கள் சரக்கு குடித்தால் தொண்டைவலிக்கு இதமாக இருக்கும் என்று எந்தக்காலத்திலும் சொல்லவேயில்லை. அதனால் எந்த பின்விளைவுகளுக்கும் எங்கள் சரக்கு பொறுப்பாகாது என்று அந்த நிறுவனம் தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டது.
கொரோனா நிவாரணத்திற்கு சரக்கு பாட்டில்களை தரச்சொல்லி சர்ச்சையை எற்படுத்தியிருக்கும் நைரோபி ஆளூநர், ஏற்கனவே லஞ்ச ஊழல் வழ்க்கில் சிறைக்கு போய்வந்து இதற்கு முன்பும் பெரிய சர்ச்சையை உண்டாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது..