மும்பை: ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் பிசிசிஐ அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச் மாதம் தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர், இந்தியாவில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தானாக முன்வந்தது.
“ஐபிஎல் தொடர் ரத்துசெய்யப்பட்டால் அதனால் பிசிசிஐ அமைப்பிற்கு ரூ.3000 கோடி நஷ்டம் ஏற்படும். எனவே, அதனைத் தவிர்க்க தொடரை இலங்கையில் நடத்திக் கொள்ளலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இங்கே செய்து தரப்படும். இலங்கையில் கொரோனா தாக்கம் அந்தளவிற்கு இல்லை. நிலைமை விரைவில் சீரடையும்” என்றார் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா.
ஆனால், “இலங்கை கிரிக்கெட் வாரிய யோசனை குறித்து விவாதிப்பதில் பிரயோஜனமில்லை. மேலும், அங்கிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, எதுவும் கூறுவதற்கில்லை” என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.