புதுச்சேரி:
ரடங்கு காரணாக முடக்கப்பட்ட பகுதியைச்சேர்ந்த இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, எந்தவொரு வண்டியும் கிடைக்காத நிலையில், அந்தப் பகுதியில் பணியில் இருந்த  காவலர் கருணாகரன் ஆட்டோவை அவரே ஓட்டிச்சென்று,  நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ மனையில் சேர்த்தார்.
சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அந்த பெண்ணிற்கு  அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவசர காலத்தில் உதவிய காவலர் கருணாகரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
 கடமை உணர்வுடன் செயல்பட்டு இரு உயிரை பாதுகாத்த காவலர் கருணாகரனை முத்தியால் பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் நேரில் சென்று வாழ்த்தினார்.
கொரேனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக  விழுப்புரம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சம்பவத்தன்று ள்ளிரவு 12 மணியளவில், அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.  அதைக்கண்ட அந்த பெண்ணின் தாயார், சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த  காவலர் கருணாகரனிடம் உதவி கோரினார். அந்த  நள்ளிரவு நேரத்தில் எந்தவொரு வண்டியும் கிடைக்காத நிலையில், அருகே பார்க் செய்யப்பட்டிருந்த ஆட்டோ உரிமையாளரானமுதியவரிடம், ஆட்டோவின் சாவியை வாங்கி, காவலர் கருணாரன்,   ஊர்காவல் படை வீரர் அருண்ஜோதி உதவியுடன்,  பிரசவ வலியால் துடித்த  இளம்பெண் மேகலாவை  அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்று சேர்த்தார்.
சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வைலானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் காவலர் கருணாகரனுக்கு நேரிலும், சமுக வலைதளம் மூலமாகவும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
காவலர் கருணாகரனுக்கு  புதுச்சேரி காவல் துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா   துறை ரீதியான பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்துள்ளார்.