சென்னை:
கொரோனா பரவலில் தமிழகத்தில், சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னை முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சிஏஏ சட்டத்துக்கு எதிராக ஷாகின்பாத் போராட்டம் நடத்திய ராயபுரத்தில் அதிகப்பட்ச மாக 73 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ராயபுரத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏராளமானோர் டெல்லியில் நடைபெற்ற இமாம் தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நூற்றுக்கணக்கானோர் தனிப்படுத்துதலில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், பலர் நோய் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இன்று காலை (சனிக்கிழமை) நிலவரப்படி சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 73 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, திருவிக நகரில் 33 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 26 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 20, அண்ணா நகரில் 24, தேனாம்பேட்டை 19 பேருக்கும் கரோனா பாதித்துள்ளது.
இதுவரை மணலி மற்றும அம்பத்தூரில் கரோனா பாதிப்பு பதிவு செய்யப்படவில்லை.