சென்னை
ஊரடங்கால் திடக்கழிவுகள் மிகவும் குறைந்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நாடெங்கும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாகக் குப்பைகள் உடனடியாக நீக்கப்படுகின்றன.
இவ்வாறு உடனடியாக குப்பைகள் நீக்கப்படுவதால் அகற்றப்படும் திடக் கழிவுகள் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 15 நாட்களில் நகரில் திடக்கழிவுகள் குறைந்துள்ளன.
வழக்கமாக 15 நாட்களில் அகற்றப்படும் திடக்கழிவுகள் 15 டன்களாக இருக்கும்.
ஆனால் ஏப்ரல் 1 முதல் 15 வரை திடக்கழிவுகள் 3622 டன்கள் மட்டுமே இருந்துள்ளன.
இது வழக்கத்தை விட சுமார் 35% குறைவாகும்.
இதற்கு முக்கிய காரணம் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் இயங்காதது ஆகும் என கூறப்படுகிறது.