டெல்லி

சல்மான்கான், தோனி இருவருமே தனக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஸ்டார்ஸ் என கிரிக்கெட்டர் கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளதால் செலிபிரிட்டிகள் பலரும் சமூக வலைதளங்கள் வழியே கலந்துரையாடி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் இன்ஸ்டாவில் கலந்துரையாடினார். ரசிகர் ஒருவர், அவருக்கு பிடித்த சூப்பர் ஸ்டார் குறித்து கேட்டார்.

அதற்கு பதிலளித்த கேதார், “பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் தோனி இருவரும் தனக்கு சூப்பர் ஸ்டார்ஸ்” எனக் கூறினார். மற்றோரு ரசிகர், இருவரில் மிகவும் பிடித்த சூப்பர் ஸ்டார் யார் எனக் கேட்டார்.

அதற்கு கேதார் உணர்வு பூர்வமாக பதிலளித்தார். “எனக்கு நடிகர் சல்மானை தோனி மூலம்தான் தெரியும். சல்மான் என்னை மிகவும் வியக்க வைத்த மனிதர். தோனி மிகவும் அமைதியானவர், நுட்பமான கவனிக்கும் திறன் உடையவர்.

என்னைப் பொறுத்தவரை இருவரில் யாரை மிகவும் பிடிக்குமெனக் கேட்டால் இருவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்களே. குழந்தையிடம் பெற்றோரில் யாரைப் பிடிக்கும் என பிரித்துக் கேட்பது போன்றது இந்த கேள்வி. இதற்கு நான் பதிலளிப்பது மிகவும் சவாலானது” என கேதார் ஜாதவ் பதிலளித்தார்.

மேலும் சச்சினை பார்த்து வளர்ந்த தன்னால் அவருடன் இந்தியாவிற்காக விளையாட முடியாமல் போனது மிகவும் வருத்தம் தருவதாகவும் கூறினார்.