சென்னை:

இது ஒருபுறம் இருக்க, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த நீட் பயிற்சி வகுப்புகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று மாணவ மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே தங்களுக்கு எந்தவொரு பயிற்சியும் வழங்கப்பட வில்லை,  நாங்கள் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்றே தெரியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்து உள்ளனர்.
ஆனால்,  அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான மாற்றுத் திட்டம் தங்களிடம் இருப்பதாக பள்ளி கல்வித் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கான காவல அவகாசம் போதுமா என்பது கேள்விக்குறியே.
கொரேனா வைரசின் தாக்கம் உயர் கல்வியான மருத்துவம் மற்றும் ஐஐடி பொறியியல் படிப்புகளை நம்பியிருந்த மாணவர்களின் வாழ்க்கையிலும் விளையாடி உள்ளது.