வாஷிங்டன்

ந்தியாவுக்கு வர வேண்டிய சோதனை கருவிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது பற்றி தெரியாது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகப்படியாக மகாராஷ்டிரா டில்லி,, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காணப்படுகிறது.   இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவல் இருப்பதால் துரித சோதனை கருவிகள் வாங்க அனைத்து மாநிலங்களுக்காகவும் இந்திய அரசு ஆர்டர் அளித்திருந்தது.

இந்தியா மொத்தம் 5 லட்சம் துரித சேவை க்ருவிகளுக்கு சீனாவுக்குக் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி ஆர்டர் அளித்திருந்தது.  அவற்றைச் சீனா ஏப்ரல் மாதம் முதல் இரு வாரங்களுக்குள் இந்தியாவுக்கு அளிக்க வேண்டும்.   ஆனால் அவை இதுவரை வந்து  சேரவில்லை.

தமிழக அரசு தலைமை செயலர் சண்முகம் தமிழகத்துக்காக ஆர்ட்ர் செய்யப்பட்ட சோதனைக் கருவிகளை சீன அரசு அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டதாகத் தெரிவித்தார்.   இந்த செய்தி மக்களிடையே கடும் பரபரப்பை ஏறடுத்தியது.

இது குறித்து உலக சுகாதார மைய அதிகாரி மைக் ரயான், “நான் அறிந்தவரை இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.   ஆனால் தற்போது மருத்துவ சோதனை கருவிகள் தேவை அதிகம் உள்ளதால் ஒவ்வொரு நாடும் தங்களுக்குத் தேவை என அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை அமெரிக்காவில் உள்ள வேறு ஏதாவது அமைப்பு மூலம் அமெரிக்கர்கள் தங்களுக்குச் சாதகமாக இது போன்ற செயலை செய்திருக்கலாம்.  இது அமெரிக்காவின் தவறாகும்.  அந்நாடு ஏற்கனவே கொரோனா தடுப்பில் தோல்வி அடைந்துள்ளது.  இது போன்றவை அனுமதிக்கத்தக்கது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.