பெங்களூர்:

பெங்களூர் மெட்ரோ கட்டுமான ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்ளம் வழங்கப்படவில்லை என இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை அடிப்படையாக கொண்ட மாரா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மெட்ரோ மற்றும் தனியார் கட்டுமான பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லைஎ என்று குறிபிடபட்டுள்ளது.

கர்நாடக அரசு மற்றும் மையத்தின் கடுமையான உத்தரவுகள் இருந்தபோதிலும், பெங்களூரில் மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுகான சம்பளம் வழங்கப்படவில்லை என்று அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவை முன்னிட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இது கடுமையான உணவு பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இதுமட்டுமின்றி பிற நகரங்களிலிருந்து குடிபெயர்ந்த பெரும்பான்மையான தொழிலாளர்களிடையே வாழ்க்கை நிலை மோசமடைந்துள்ளன, பெங்களூருவை தளமாகக் கொண்ட மாரா மற்றும் கலை கூட்டு நிறுவனமான மரா தயாரித்த விரிவான அறிக்கையை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரா தனது அறிக்கையில், தொழிலாளர்கள் வாரத்தில் ஏழு நாட்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரை நாட்கள் வேலை செய்கிறார்கள். அப்படிஅவர்கள் வேலை செய்யவில்லை என்றால், அவர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைக்கு 300 ரூபாய் மற்றும் 12 மணி நேரத்திற்கு 500 ரூபாய் என வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கு 13,000 முதல் 15000 வரை சம்பளமக பெற்று வருகின்றனர்.

ஊதியம் இல்லாமல், இந்த தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை ஊரடங்கு காரணமாக கழித்தாலும், உணவு ரேஷனின் செலவை தங்கள் சொந்த பைகளில் இருந்து வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒப்பந்தக்காரர்கள் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு அமலில் உள்ளதையடுத்து அடிப்படை உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொழிலாளர்களை நிதி ரீதியாக மேலும் அம்பலப்படுத்தியுள்ளது என்பதை மரா தனது அறிக்கையில் எடுத்துகாட்டியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், மக்களின் கடுமையான வாழ்க்கை நிலைமைகளை விரிவாக விளக்கம் அளித்துள்ளதுடன், அவர்கள் நிலையை சரி செய்ய தொழிலாளர் துறை மற்றும் பெங்களூர் மெட்ரோ ரயில் கழகம் ஆகியவை உடனடியாக தலையீட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.