வாஷிங்டன்
கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் 40க்கும் அதிகமான இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அமெரிக்காவை மிக அதிகமாக பாதித்துள்ளது. கொரோனா 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து 20000 பேருக்கு மேல் பலி வாங்கி அமெரிக்காவை முதல் இடத்துக்கு கொண்டு வந்துள்ளது. தினம் பலி எண்ணிக்கை 2000 மற்றும் அதற்கு மேல் செல்வதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இது இந்திய மக்களை கடும் சோகத்தில் தள்ளி உள்ளது. இவர்க்ளில் அதிகபட்சமானோர் கேரளாவை சேர்ந்தோர் ஆவார். இவ்ர்களில் ஒருவர் 21 வயதானவர் ஆவார்.
வாஷிங்டனில் கேரள மாநிலத்தவர் 17 பேர், குஜராத்திகள் 10 பேர், பஞ்சாபிகள் 4 பேர்,ஆந்திரர் 2 பேர் ஒரிசா மநிலத்தவர் ஒருவர் மரணம் அடைந்துள்ளனர். நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் மரணம் அடைந்தோர் குறித்து சரியான விவரங்கள் வரவில்லை. நியூஜெர்சியில் லிட்டில் இந்தியா மற்றும் ஓக் டிரி சாலை பகுதியில் உள்ளோர் அதிக அளவில் உயிர் இழந்துள்ள்ணர்.
இவர்களில் கன்னோவா அனலிடிகல் நிறுவன தலைமை செயல் அதிகாரி அனுமந்தராவ் மரே பலி மரணம் அடைந்தவர்களில் ஒருவர் ஆவார். இவ்ர் நியூஜெர்சியில் எடிசன் நகரில் உயிர் இழந்துள்ளர். இவ்ருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
இதே நகரில் இந்திய சதுக்கத்தில் உள்ள சந்திரகாந்த் அமின் என்னும் 75 வயது முதியவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். நியூஜெர்சியில் பூட்டி இருந்த ஒரு வீட்டுக்குள் ஒரு இந்திய வம்சாவளியினர் கொரோனா தாக்குதலால் உயிர் இழந்து கண்டறியப்பட்டுளர்.
இதுவரை 1500க்கும் அதிகமான இந்தியர்கள் மருத்துவ சோதனை செய்யபட்டுள்ளனர். அவர்களில் 19 பேருக்கு நேற்று தொற்று உள்ளது உறுதி செய்ய்யட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உலக இந்துக் கவுன்சிலின் அமெரிக்கக் கிளை உண்வு அளித்து வருகிறது.
மற்றொரு இந்திய அமைப்பு உள்ளூர் காவல்துறையினருக்கு 85000 கையுறைகளை வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு உதவ பலரும் முன் வந்துள்ளனர் என்பது அவர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.