டெல்லி:

யேசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை நாளை கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் நிலையில், அவர்களுக்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்:

“இந்த புனிதமான ஈஸ்டர் திருநாளில், நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள கிறித்துவ மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளில்தான் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுவதால் அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறித்தவர்களுக்கு மிகப் புனிதமான இந்தப் பண்டிகை, அன்பு, தியாகம், மன்னித்தல் என்ற பாதையில் பயணிக்க மக்களை ஊக்குவிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து கற்றுக் கொண்டு, மனித குலத்தின் பொதுவான நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்போம்.

இந்த சவாலான நேரத்தில், கொவிட்-19க்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்த புனிதமான பண்டிகையை, `சமூக விலக்கல்’ முறையையும், அரசின் நெறிமுறைகளையும் கடைபிடித்து, நமது குடும்பங்களுடன் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாட உறுதி ஏற்போம்.”

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு:

எப்பொழுதும் இருளை வென்று ஒளி பரவும் என்பதை உயிர்த்தெழும் கதை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும், ஒட்டு மொத்த உலகமும், கொவிட்-19க்கு எதிராக வெற்றியுடன் மீண்டெழும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.