கொரோனா வைரஸின் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வழக்குகள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் அவர்களது அத்தியாவசிய தேவைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி, மத்திய அரசு  8 ஆயிரம் கோடி மக்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்த இந்த கருத்தை பலரும் கிண்டலடித்து வருகின்றனர். #8000 கோடி மக்களுக்கு 5000 கோடி ரூபாய் பிரிச்சி கொடுத்தா தலைக்கு 62.5 பைசா வரும் என்று பதிவிட்டு கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதமர் மோடி விளக்கு ஏற்ற சொன்னபோது மதுவந்தி பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டான நிலையில், தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]