லிகோன்ஷயர், இங்கிலாந்து
தற்போதுள்ள தனிமைப்படுத்தல் போன்ற கால கட்டத்தில் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பல கண்டுபிடிப்புக்களால் மனித குலத்துக்கு நன்மை அளித்தார்.
பிரபல கணிதம் மற்றும் கணித மற்றும் இயற்பியல் மேதை சர் ஐசக் நியூட்டன் தனது தனிமைப்படுத்தல் காலத்தில் அரிய கண்டுபிடிப்புக்களைக் கண்டறிந்தார். அவருடைய சாதனைகளைப் பற்றி இப்போது தெரிந்துக் கொள்வது மக்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும் விஷயமாகும். இவருடைய புவியீர்ப்பு விசை கருத்துக்கள் அப்போது தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கிலாந்து நாட்டின் லிகொன்ஷயர் பகுதியில் உள்ள வூல்ஸ்த்ரோப் என்னும் சிற்றூரில் நியூட்டன் பிறந்தார். அவர் பிறக்கும் முன்பே அவர் தந்தை மரணம் அடைந்து விட்டார். தாய் இவருடைய மூன்றாம் வயதில் மற்றொரு திருமணம் செய்துக் கொண்டு இவரைத் தனது தந்தையிடம் விட்டு விட்டுச் சென்று விட்டார். இவர் தனது தாய் வழி தாத்தாவின் கவனிப்பில் வளர்ந்தார். அங்குள்ள கிராமப்பள்ளியில் கல்வி கற்றார்.
அதன் பிறகு தாயின் இரண்டாவது கணவர் இறந்ததால் இவரது கல்வியை நிறுத்த தாயார் எண்ணினார். ஆனால் ஆசிரியர் வற்புறுத்தலால் மீண்டும் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார். முதலில் சாதாரண மாணவராக இருந்த நியூட்டன் அதன் பிறகு மிகச் சிறந்த மாணவராக ஆகி கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார்.
நியூட்டனின் 23 ஆம் வயதில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியதால் மாணவர்களை வீட்டில் இருந்தே கல்வி கற்கப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இங்கிலாந்து சரித்திரத்தில் இந்த காலகட்டம் மிகவும் சோகமான ஒன்றாகும். இரு முறை நியூட்டன் இந்த நோய் பரவுதலுக்காகத் தந்து சொந்த ஊர்க்குச் செல்ல நேர்ந்தது. இந்த தனிமைப்படுத்தல் காலம் முழுவதையும் அவர் புதிய கண்டுபிடிப்புக்களுக்காக பயன்படுத்தினார்.
இந்த காலகட்டத்தில் அவர் ஆப்டிக்ஸ், கால்குலஸ், இயக்க விதிகள், மற்றும் புவியீர்ப்பு குறித்துக் கண்டுபிடித்தார்.
முதலில் ஒளியின் குணாக்களைப் பற்றி அவர் கண்டறிந்தார். ஒரு பிரிசம் மூலம் ஒளி பாய்ச்சி ஏழு வண்ணங்களையும் வெளிப்படுத்துவது குறித்து முதலி கண்டறிந்தார். அவர் தனது ஊரில் தனது அறையில் உள்ள ஒரு சிறு ஓட்டை மூலம் ஒளி விழுவதை ஆராய்ந்து அதன் பிறகு அதை ஒரு கண்ணாடி பிரசம் மூலம் செலுத்தி வான வில் வணஙக்ளை கண்டறிந்தார். மேலும் இதன் மூலம் அவர் தனது முதல் தொலைநோக்கியை உருவாக்கினார்.
அவர் அதே வேளையில் கணிதத்தில் ஒரு புதிய முறையைக் கண்டறிந்தர். தற்போது அது கால்குலஸ் என அழைக்கப்படுகிறது. இதே கால்குலஸ் தியரி குறித்து அதே கால கட்டத்தில் அதாவது 1660களில் காட்ஃப்ரெட் என்பவரும் தெரிவித்ததால் இதைக் கண்டறிந்தவர் யார் எனத் தெளிவாக கூற முடியவில்லை.
நியூட்டன் ஒரு நாள் தனது அறையில் இருந்து வெளியே உள்ள ஆப்பிள் மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு ஆப்பிள் பழம் வீழும் போது நேர்க்கோட்டில் பூமியை நோக்கிச் செல்வதைப் பார்த்தார். அதன் மூலம் பூமி அதைக் கீழே இழுப்பதைக் கண்டறிந்து அனைத்துப் பொருட்களும் இதைப் போல் பூமி தன்னுடன் இணைத்துள்ளதை கட்னறிந்தார்.
இயக்க விதி இவர் தனிமைக் காலத்தில் கண்டறிந்த மற்றொரு கண்டுபிடிப்பு ஆகும். இதற்கு அவர் தனது கணித சூத்திரங்களைக் கொண்டு ஒரு வெளி சக்தி ஒரு பொருளை இயக்கி நகர்ச் செய்வதையும் அந்த சக்தி எவ்வளவு என கணக்கிடும் முறைகளையும் கண்டறிந்தார். தனிமைப்படுத்தல் முடிந்ததும் நீயூட்டன் தனது கண்டுபிட்பான ஆப்டிக்ஸ், கால்குலஸ், புவியீர்ப்பு, இயக்க விதி உள்ளிட்ட அனைத்தை பற்றியும் புத்தகங்கள் வெளியிட்டார்.
தனிமைப்படுத்தலை முழுமையாகப் பயன்படுத்திய ஒரே விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் மட்டுமே ஆவார். தற்போதுள்ள தனிமை நிலையை ஐசக் நியூட்டன் சரித்திரத்தின் மூலம் எவ்வாறு பயனுள்ளதாக்க முடியும் என்பதை இக்கால மாணவர்கள் உணர்ந்து செயல்படுவது மிகவும் நன்மை அளிக்கும்.