வாஷிங்டன்:

லகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் உள்ள மாமிசச் சந்தைகளை உடனே மூடுங்கள் என்று  அமெரிக்க எம்.பி.க்கள் குழு சீனாவை வலியுறுத்தி உள்ளது.

மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள ஒரு ஈரமான சந்தை (மாமிச்சந்தை)  கடந்த ஆண்டு டிசம்பரில் உருவானி கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆதாரமாக இருப்பதாக நம்பப்படுகிறது, இது விலங்குகளிலிருந்து மனிதர்களிடம் பரவுவதாக கூறப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இந்தியா உள்பட 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் உள்ள ஈரமான மாமிசச்சந்தைகளை உடனே மூடுங்கள் என்று அமெரிக்க எம்.பி.க்கள் (செனட்) குழுவினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து,  அமெரிக்க செனட் சபை எம்.பி.க்கள் சீன தூதருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனாவில் மீண்டும் கொரோனா பரவும் அச்சம் இருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், சமீபகாலமாக அங்கு எந்தவொரு கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் குறித்த தகவல் வெளியாகவில்லை.

அங்கு ஊரடங்கு விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நகர்களில் மீண்டும் வழக்கம்போல மாமிசச்சந்தைகள் களைகட்டி வருகின்றன. அங்கு நாய், பூனை, பாம்பு, வவ்வால் போன்ற மாமிச இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கூறிய, சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் காவ் ஃபூ, “புதிய கொரோனா வைரஸின் தோற்றம் வுஹான் (சீனா) கடல் உணவு சந்தையில் சட்டவிரோத மாக விற்கப்படும் வனவிலங்குகளே” என்று தெரிவித்து உள்ளார். இது அந்நாட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான் அமெரிக்கா செனட்சபை உறுப்பினர்கள் சீனா தூதருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அதில், “மனித மக்களிடையே ஜூனோடிக் நோயை உருவாக்கி வரும், சுகாதார முறையற்றதும், மனிதர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதுமான அனைத்து  ஈரமான சந்தைகளையும் சீனா உடனடியாக மூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“சீனாவின் ஈரமான சந்தைகள் உலகளாவிய சுகாதார பிரச்சினைகளுக்கு ஆதாரமாக இருந்தன என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் சீன மக்களையும் சர்வதேச சமூகத்தையும் கூடுதல் சுகாதார அபாயங்களிலிருந்து பாதுகாக்க அவர்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளது.

“எனவே, பொது சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான தொடர்புகளை அனுமதிக்கும் அனைத்து ஈரமான சந்தைகளையும் மூடுமாறு சீனாவை நாங்கள் வலியுறுத்துகிறோம்”.

“ஈரமான சந்தைகள் சீன சமுதாயத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் ஒரு முக்கிய அங்கமாகும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டு மதிக்கிறோம், ஆனால் உலகெங்கிலும் உள்ள அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்துள்ள தற்போதைய தருணம், தீவிர முன்னெச்சரிக்கைகளுக்கு அழைப்பு விடுகிறது. இந்த நேரத்தில் ஈரமான சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது தவறானது என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த கடிதத்தில்குடியரசுக் கட்சி மிட் ரோம்னி, குடியரசுக் கட்சியின் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயக கிறிஸ் கூன்ஸ் உள்பட 11 செனட்டர்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.

சீனாவின் ஈரமான சந்தைகளை மூடுமாறு தேசிய சுகாதார நிறுவனங்களின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் (என்ஐஏஐடி) இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபாசி சீனா  இப்போதே (ஈரமான சந்தைகளை) மூட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததை அடுத்து செனட்டர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

வெட் மார்க்கெட் (wet market) என்பது என்ன?

ஈரமான சந்தை என்பது மாமிச உணவுகள் விற்பனை செய்யப்படும் சந்தை. இங்கு வனவிலங்கு களின்  புதிய இறைச்சி, மீன்,  மற்றும் அழிந்துபோகக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறது.

மேலும், சாதாரண உலர் சந்தையில் இருந்து முற்றிலும்  வேறுபடும் இந்த சந்தைகளில் மாமிச உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதும், அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும், அதை சுத்தம் செய்யும் நிகழ்வுகள் மற்றும் கடல் உணவுக் கடைகளை சுத்தம் செய்வது போன்றவற்றால், எப்போதும் ஈரமாகவே காணப்படுவதால், அது வெட் மார்க்கெட் என்று பெயர்பெற்றது.