பீஜிங்:

கொரோனா வைரஸ் பாதிப்பு  சீனாவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் அங்கு நாய்ச்சந்தையை மூட உத்தரவிட்ட சீன அரசு, தற்போது சாடு முழுவதும் நாய் இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்துள்ளது.

கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவுன் வுகான் நகரில் உள்ள மாமிசச்சந்தையில் இருந்து உருவானமாக கூறப்பட்டது. இந்த வைரஸ் தாக்கத்தினால் கடுமையான இழப்புகளை சீனா சந்தித்தது. அதைத்தொடர்ந்து, தற்போது பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

சீனாவில் நாய்கறி, பாம்பு கறி, வவ்வால் கறி விரும்பி உண்ணப்பட்டு வரும் நிலையில், விலங்ககளின் மாமிசம் மூலமே கொரோனா வைரஸ் பரவுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து,  பல இடங்களில் மாமிசச்சந்தைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாய்கள் மக்களின் தோழர்கள் என்றும் அவற்றை சாப்பிடக்கூடாது என்று கூறி உள்ளது. அந்நாட்டின் வேளாண் அமைச்சகம் ‘மனித நாகரிகத்தின் முன்னேற்றம் மற்றும் பொது அக்கறை’ காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படு கிறது என்று தெரிவித்து உள்ளது.

நாய்களை கால்நடைகள் அல்ல என்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும், அவற்றை செல்லப் பிராணிகளாகவே கருத வேண்டும் என்றும்  சீனா கூறியுள்ளது  இதனால், நாட்டின்  பூனை மற்றும் நாய் இறைச்சி வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்படுகிறது.

“மனித நாகரிகத்தின் முன்னேற்றம் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்கான பொதுமக்களின் அக்கறை மற்றும் விருப்பத்துடன், நாய்கள் பாரம்பரிய வீட்டு விலங்குகளிலிருந்து துணை விலங்குகளாக மாறிவிட்டன” என்று சீனாவின் வேளாண் மற்றும் கிராம விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு புதன்கிழமை தேசிய கால்நடை மற்றும் கோழி மரபணு வளங்களின் வரைவு ஆவணத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன்  மருத்துவ நோக்கங்களுக்காக கால்நடைகளின் இறைச்சி, ரோமம் சட்டப்பூர்வமாக வர்த்தகம் செய்யலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

கடந்த வாரம், சீனாவின் ஷென்சென் அவர்களின்  விலங்குகளின் விற்பனை மற்றும் இறைச்சிக்கு தடை விதித்தது.  இந்த உத்தரவு காரணமாக,  சீனாவில் நீண்டகாலமாக இருந்து வரும் நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ஹ்யூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் (எச்.எஸ்.ஐ) கருத்துப்படி, சீனாவில்,  இறைச்சி வர்த்தகத் திற்காக ஆண்டுக்கு 10 மில்லியன் நாய்கள் கொல்லப்படுவதாகவும்,, இது மக்கள்தொகை யில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களால் அரிதாகவே நுகரப்படும் உணவு என்றும் தெரிவித்து உள்ளது.

2016 ஆம் ஆண்டில் நாடு தழுவிய ஒரு கணக்கெடுப்பின்படி,  70 சதவிகிதம் பேர் நாய் இறைச்சியை சாப்பிடுவது இல்லை என்றும், சீன குடிமக்களில் பெரும்பான்மை யானவர்கள் நாய் இறைச்சி வர்த்தகத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.