சென்னை:
வெளியூர் சென்றுவந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவர் குடியிருந்த நந்தம்பாக்கம் கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை குன்றத்தூர் அருகே உள்ளது நந்தம்பாக்கம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் வெளியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து காய்ச்சல், சளி இருந்து வந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அவரிடம் இருந்து, ர் மனைவி மற்றும் மகனுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நந்தம்பாக்கம் கிராமம் சீல் வைக்கப்பட்டு உள்ளது.