டெல்லி:

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் பணியில் தீவிரமாக 5 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.. இவர்களில் ஒருவர் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்.

இவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி பீலோ ராஜேஷ் இடம்பெற்றிருப்பது தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்து உள்ளது.

இந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்தித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த சவாலைசந்திக்க ஏராளமானோர் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில்,  நிர்வாகம், நோயறிதல், தடுப்பு, ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை போன்ற முக்கிய துறைகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, பல பெண்கள் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் சுழன்று பணியாற்றி வருகின்றனர்.

பீலா ராஜேஷ்

1997 ஆம் ஆண்டு தேர்ச்சிப்பெற்ற ஒரு IAS அதிகாரி. செங்கல்பட்டில் துணை கலெக்டராக பணிப்புரிந்தவர். இவர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் மருத்துவராக தேர்ச்சிப்பெற்ற இவர் தமிழக மாநிலத்தில் சுகாதாரச்செயலாளராக பணிப்புரிந்து வருகிறார். ஊடக நட்பு அதிகாரியாக அறியப்படுகிறார் மற்றும் டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார்.

“வைரஸ் யாரையும் பாதிக்கலாம், ஒருவருக்கொருவர் மென்மையாகவும், உணர்ச்சிகரமாகவும் இருப்போம், கொரோனா வைரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த போரை நடத்துவோம்” என்று அவர் சமீபத்தில் பதிவிட்டார். இந்த பதிவு தமிழக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது.

இவர் ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தின்  துணை சேகரிப்பாளராகவும், மீன்வள ஆணையராகவும், தமிழ்நாட்டில் நகர மற்றும் நாடு திட்டமிடல் ஆணையராகவும் பணியாற்றினார். அவர் 2019 இல் சுகாதார செயலாளராக மாற்றப்படுவதற்கு முன்பு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராகவும் பதவி வகித்தார்..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களுள் ஒன்று தமிழகம். அதனால் மிகவும் கவனமான முறையில் தனிப்படைகள் அமைத்து இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள தீவிரமான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். தமிழகத்தின் சுகாதார செயலாளராக, ராஜேஷ் தனது மாநிலத்தில் உள்ள சவாலை சமாளிப்பதில் முன்னணியில் உள்ளார்.

என்ஐடிஐ ஆயோக் சுகாதார குறியீட்டில் அனைத்து இந்திய மாநிலங்களிலும் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

பீலா ராஜேஷின் கீழ், மாநில அரசு, மையம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம் 2019 ஜூன் மாதம் 287 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த திட்டம் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும், தொடர்பு கொள்ள முடியாத சுமைகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது நோய்கள் (என்.சி.டி), மற்றும் தமிழ்நாட்டில் இனப்பெருக்க மற்றும் குழந்தை சுகாதார சேவைகளில் பங்கு இடைவெளிகளை நிரப்புகின்றன.

பிரீத்தி சூடன் (Preeti Sudan)

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வருபவர்  பிரீத்தி சூடன், ஆந்திராவை சேர்ந்தவரான இவர், 1987 ஆம் ஆண்டு தேர்ச்சிப்பெற்ற IAS அதிகாரி.  இந்திய யூனியன் சுகாதாரத் துறை அமைச்சருடனும், பிரதமருடன்  நேரடி தொடர்பில் இருப்பவர்.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதாரச் சரிவு மற்றும் மோடி எடுக்கும் பல்வேறு முடிவுகள் குறித்து ஆராய்ந்து, கருத்து தெரிவிப்பவர்.

சீனாவில் கொரோனா தாக்கம் தீவிரமானது, வுஹான் நகரத்தில் சிக்கி தவித்த 625 இந்திய மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்ததும் இவர்தான். இவர் ஏற்கனவே  உலக வங்கியில் கன்சல்டன்ட்டாக பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரியா ஆபிரகாம்

புனேவின் தேசிய வைரலாஜி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வருபவர் டாக்டர் பிரியா ஆபிரகாம்,  வேலூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரியில் PhD படிப்பை முடித்த மருத்துவர். கொடிய கொரோனா வைரஸை தனிமைப்படுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ முன்னேற்றம் ஏற்படுவதற்கு  காரணமாக திகழ்ந்தவர். இவரது ஆலோசனையின்பேரிலேயே சமூக விலகலும், தனிமைப்படுத்தப்படுதலும் தீவிரப்படுத்தப்பட்டது,

இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று  பரிசோதனை பூனேவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைரலாஜியில் தான் செய்யப்பட்டது.  இவரது முயற்சியில்தான்,  நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.  கொரோனா சோதனைக்கு தொடக்க காலத்தில், செய்ய 12-முதல் 14 மணிநேரமானது. ஆனால் அதனை 2-4 மணிநேரத்திற்கு குறைத்தது பிரியா ஆபிரகாமின் தலைமையில் செயல்பட்ட கூட்டணி என்பது மகிழ்ச்சிக்குரியது.

டாக்டர். நிவேதிதா குப்தா

கடந்த 30 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் பயோடெக்னாலஜி துறையில் (டிபிடி) பணியாற்றி வருகிறார். அவர் ஒரு சிறந்த விஞ்ஞானியைக் குறிக்கும் விஞ்ஞானி ‘எச்’ பதவியை வகித்தார்.கடந்த ஆண்டு ஏப்ரல் 2018 அவர் செயலாளராக நியமிக்கப்பட்டார். டாக்டர் குப்தாவின் முதன்மை பொறுப்பு இந்தியாவில் சோதனை மற்றும் சிகிச்சை நெறிமுறைகளை உருவாக்குவது.

இவர் ஏற்கனவே கேரளா மாநிலத்தில் பரவிய நிஃபா வைரஸ் பாதிப்பின்பொது, அங்கு பணியாற்றி,  தூங்காமல் உழைத்து அந்த வைரஸ் எவ்வாறு பரவியதென்பதை கண்டறிந்து உலக்கு வெளிப்படுத்தியவர். தற்போதும், தொற்று நோய்கள் பற்றிய ஆராய்ச்சியில் பணியாற்றிவருகின்றார். நாடு முழுவதும்  கொரோனா கண்டறியும் சோதனைக்கூடங்கள் மற்றும், ஆய்வுகள்  கண்டறியும் திறனை அதிகரிக்கச்செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ்., டாக்டர் குப்தா, நாடு முழுவதும் கோவிட் -19 கண்டறியும் திறனை அதிகரிக்க முக்கிய நபராக உள்ளார். இரண்டு மாத கால இடைவெளியில், கொரோனா வைரஸ் வழக்குகளை கண்டறிய அரசுத் துறையில் 130 க்கும் மேற்பட்ட ஆய்வகங்களும், தனியார் துறையில் 52 ஆய்வகங்களும் உருவாக்கப்பட்டதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) மூத்த விஞ்ஞானி டாக்டர் நிவேதிதா குப்தா ஒரு புகழ்பெற்ற மருத்துவர், அவர் சிகிச்சை மற்றும் சோதனை நெறிமுறைகளை வடிவமைப்பதில் மும்முரமாக இருக்கிறார்,   இவர் டெல்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாலிகுலார் மெடிசின் என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து  Phd பட்டம் பெற்றவர்.

என்டோவைரஸ்கள், அர்போவைரஸ்கள் (டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய என்செபாலிடிஸ் & ஜிகா), இன்ஃப்ளூயன்ஸா, அம்மை மற்றும் ரூபெல்லா போன்ற வைரஸ் வெடிப்புகள் குறித்து டாக்டர் குப்தா தீவிரமாக ஆய்வு செய்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான என்செபாலிடிஸ் நோய்க்குறிக்கு, ஆய்வியலைப் புரிந்துகொள்வதில் விரிவாக பணியாற்றிய மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை உருவாக்கிய குழுவில் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.

ரேணு ஸ்வரூப்

கடந்த 30 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் பயோடெக்னாலஜி துறையில் (டிபிடி) பணியாற்றி வருகிறார். அவர் ஒரு சிறந்த விஞ்ஞானியைக் குறிக்கும் விஞ்ஞானி ‘எச்’ பதவியை வகித்தார் – ஏப்ரல் 2018 வரை, அவர் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஸ்டெம் செல் ரெசெர்ச்களில் திறமைசாலியான இவர் H ரேஞ் விஞ்ஞானியாக பணியாற்றிவருகிறார். இவர் தற்போது இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். மேலும் இந்தியாவில் மருத்துவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு பொருட்களை விலைமலிவாக எவ்வாறு தயாரிக்கலாமென்றும் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

போர்ட்டபிள் வென்டிலேட்டர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மரபணு வரிசைமுறை மற்றும் இரத்த மாதிரிகளிலிருந்து கொரோனா வைரஸ் நாவலின் திரிபு தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு அனைத்து ஐ.ஐ.டி இன்குபேட்டர்களையும் அவரது அமைச்சகம் கேட்டுள்ளது.

மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கத்தில் பி.எச்.டி, ஸ்வரூப் அறிவியலில் பெண்களை ஊக்குவிப்பதில் பெயர் பெற்றவர், மேலும் விஞ்ஞானத்தில் பெண்கள் மீதான பணிக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.

பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அறிவியல் ஆலோசனைக் குழுவில் இந்த 5 பேரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.