நியூயார்க்
கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 4 டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 11 இந்தியர்கள் உயிர் இழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 29,875 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 4,30,120 ஆகி உள்ளது. நேற்று 1895 பேர் மரணம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் மற்றும் மரணம் அடைந்தோரில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் உள்ளனர்.
இதுவரை 11 இந்தியர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதில் 10 பேர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் 4 பேர் நியூயார்க் நகரில் வாடகைக்கார் ஓட்டுநர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். மீதமுள்ள ஒருவர் புளோரிடாவை சேர்த்தவர் ஆவார்.
இதைத் தவிர 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் பெண்கள் ஆவார்கள். பாதிப்பு அடைந்தோர் சுய தனிமையில் உள்ளனர். இந்த 16 பேரும் உத்தரகாண்ட், மகாராஷ்டிர, கர்நாடகா மற்றும் உபி மாநிலத்தவர் ஆவார்கள்.
[youtube-feed feed=1]