சென்னை:
தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, கொரோனா நிதியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் முனைப்பில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக மக்களிடம் நிதி கோரி மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டன. இதையேற்று பலர் தங்களால் முடிந்த அளவில் நிதிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா நோய் தடுப்பு பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.