துபாய்:

கொரோனா பாதிப்பு காரணமாக, துபாயில் ஒருவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 24 மணி நேரம் முழு ஊரடங்கு. தேவையின்றி, யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

துபாயில் கொரோனா வைரஸ் தொற்றால்1505  பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 241 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் கொரோனா  பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று மரணம்  அடைந்தார். இதுதான் அந்நாட்டின் முதன் உயிரிழப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்,  இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு வயது 46 என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து,  துபாயில் நேற்று இரவு முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு 24 மணி நேர முழுமையான ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, அங்கு இயங்கி வந்த,  மெட்ரோ ரயில், மோனா ரயில் , டிராம், Water taxi உள்ளிட்ட எந்த பொதுப்போக்கு வரத்து சாதனங்களும் மறு உத்தரவு வரும்வரை இயங்காது என அறிவிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை.

பேருந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும். அத்யாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் மட்டும் பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கான நாளங்காடிகள் மட்டும் திறந்திருக்கும். வீட்டிற்கு ஒருவர் மட்டும் வந்து அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

மற்றவர்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் கடும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அத்தியாவசிய பணிகள் தவிர்த்த மற்ற எந்த பணிகளும் நடைபெறக்கூடாது. என துபாய் மாகாண அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீரக தலைநகர் அபுதாபி மற்றும் இதர மாகாணங்களான ஷார்ஜா, அஜ்மன், ஃபுஜைரா உள்ளிட்ட மாகாணங்களில் தற்போதிருக்கும் இரவு நேர ( 8 PM – 5 AM) ஊரடங்கு மட்டுமே செயல்படும் எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.