ரியாத்: சவூதியின் முக்கிய நகரமான ஜெட்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 7 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி(இன்று) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம்.

இதன்படி, அந்த 7 மாவட்டங்களில் வசிப்பவர்கள் காலை 6 மணி முதல் (அந்த நாட்டின் உள்ளூர் நேரம்) மாலை 3 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ பராமரிப்புக்காக மட்டுமே வெளியே செல்ல முடியும்.

மற்றபடிஇ சுற்றுப்புறங்களுக்குள் நுழையவோ வெளியேறவோ முடியாத வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிசெப்டிக் தெளித்தல், பூங்காக்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மூலம் தெருக்களில் கிருமி நீக்கம் செய்ய வேண்டியிருப்பதால், மக்கள் காலை 8 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.