மும்பை:
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், நாடு முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து வருகிறது.
ஒரே நாளில், மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவி பகுயைச் சேர்ந்தவர் உள்பட மேலும், 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது மகாராஷ்டிரா மாநிலம். இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று மக்கள் நெருக்கம் மிகுந்த குடிசைப்பகுதிகளில் நிறைந்த தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 52 வயதான பி.எம்.சி துப்புரவுத் தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அடுத்தடுத்து கொரோனா பரவி இருப்பது, அந்த பகுதி குடிசை வாழ் மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.
அங்கு இதுவரை 338 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.