சேலம்:

மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில், சேலத்தில் கண்காணிப்பு வளையத்தில் 25ஆயிரம் வீடுகள் உள்ளதாகவும் சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் மாவட்டங்களாக சென்னை மற்றும் ஈரோடு என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில்,  25 ஆயிரம் வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,  கிச்சிபாளையம், சன்னியாசிகுண்டு  போன்ற பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

இந்த பகுதிகளுக்குள் யாரும்  செல்லவோ, அங்கிருந்து யாரும் வெளியே வரவோ அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள ஆசூட்சியர்,  இந்தோனேசியாவில் இருந்து சேலம் மாவட்டம் வந்த சிலரால் நோய் தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனையில் இந்தோனேசியாவை சேர்ந்த 11 பேர் உள்பட 16 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில்  கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை எந்த நேரத்திலும்  சேர்த்துக்கொள்ளும் வகையில் வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில்,  அரசு மருத்துவமனையில் 9 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 21 படுக்கைகள் உள்ளன.

இந்த வார்டுகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்,

மேலும், “மேட்டூர், ஆத்தூர் மற்றும் ஓமலூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தலா ஐந்து படுக்கைகள் உள்ளன இது மட்டுமின்றி, கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆறு தனியார் மருத்துவமனைகளும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.