சென்னை:

வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள், அவர்களாகவே அரசின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று வந்த பலருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. அதுபோல, டெல்லி நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற  கூட்டத்தில்  நாடு முழுவதும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கு கொண்டதாகவும், அவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல்  நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் செய்தியாளர்களை ச்நதித்த ராதாகிருஷ்ணன்,  வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும் என்றும், கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினார்.

தமேலும்,  இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளி என்பது சவாலாக இருக்கிறது என்று வருத்தம் தெரிவித்தவர், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றம்,  தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது 25,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.