கொழும்பு
கொரோனா விவகாரத்தில் சென்னை மிகவும் ஆபத்தான இடம் என இலங்கை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொரோனாவை சுமந்து வருவதாக நாம் கூறி வரும் நிலையில்-
கொரோனா விவகாரத்தில் ‘ சென்னை மிகவும் ஆபத்தான மண்டலம்’’ என இலங்கை அரசு தெரிவித்துள்ள கருத்து பீதியை உருவாக்கியுள்ளது.
சென்னையில் இருந்து இலங்கை சென்ற 2 பேருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, கடந்த வாரம் சென்னையில் இருந்து அங்கு சென்ற மேலும் இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘இதனை வைத்துப் பார்க்கும் போது(கொரோனா விவகாரத்தில்) சென்னை மிகவும் ஆபத்தான மண்டலம் என்றே சொல்லலாம்’’ என்கிறார், இலங்கை சுகாதாரத்துறை டைரக்டர் ஜெனரல்.
கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் கொரோனா முகாமில் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று அந்த நாடு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
– ஏழுமலை வெங்க்டேசன்