டெல்லி: கொரோனா வைரசை எதிர்கொள்ள ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, மொத்தம் 724 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 27 நிலவரப்படி 26,798 நபர்களிடமிருந்து 27,688 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறி இருக்கிறது.
கொரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த வழி காட்டுதல்களின்படி இந்தியா செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
முதல் நாளிலிருந்து எங்கள் திட்டம் இப்படி தான் இருக்கிறது. 1.4 லட்சம் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். மேலும் 22 லட்சம் சுகாதார ஊழியர்கள் 50 லட்சம் காப்பீட்டினால் பயனடைவார்கள்.
10,000 வென்டிலேட்டர்களை உருவாக்க பொதுத்துறை நிறுவனத்திடம் கேட்டு இருக்கிறோம். 30,000 வென்டிலேட்டர்கள் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம் தர உள்ளது என்று தெரிவித்தார்.