சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பபட்டுள்ளது. இதன் காரணமாக, தாழ் வழுத்த நுகர்வோர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்வாரியம், தாழ் வழுத்த மின் பயனீட்டாளர்களின் மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான இறுதித் தேதி கடந்த 25-ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 14-ம் தேதிக்குள் இருக்குமாயின், அதற்கான கட்டணத்தை ஏப்ரல் 14-ம் தேதி வரை செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.