ஜோர்டான்

கேரள முதல்வர் தலையீட்டால் நிம்மதி அடைந்த படக்குழுவினர் குறித்த செய்தி இதோ

பிளெஸ்சி இயக்க பிரித்விராஜ் நடிக்கும் ‘அது ஜீவிதம்’ என்ற மலையாள படத்தின்  படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் நடந்து வந்தது.

கொரோனா நோயால் உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் அவுட்டோர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்விராஜ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 56 பேர் அங்குள்ள ஒரு முகாமில் தங்கியுள்ளனர்.

ஜோர்டானில் இருந்து இந்தியாவுக்கு எப்போது விமானம் இயக்கப்படும் என்று தெரியாத நிலையில், சில நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களே அவர்களுக்கு உள்ளது.

உதவி கேட்டு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, இயக்குநர் பிளெஸ்சி மெயில் அனுப்பினார்.

வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் முதல்வர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் ஜோர்டான் அரசாங்கம், படப்பிடிப்பு குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளது.

என்ன உதவி?

ஜோர்டானில் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை ஷுட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதுவரை சினிமா யூனிட்டுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள், அவர்கள் தங்கியுள்ள முகாமில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.

இருப்பினும் அவர்களுக்குக் கவலை இல்லாமல் இல்லை.

ஊரடங்கு எப்போது முடியும்?

விமானங்கள் எப்போது இயக்கப்படும்?

மொத்த யூனிட்டும் எப்போது இந்தியா செல்ல முடியும்?

இந்த கேள்விகளுக்கு கொரோனா வைரஸ் தான் பதில் சொல்ல முடியும்.

– ஏழுமலை வெங்கடேசன்