சிங்கப்பூர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 1 மீட்டர் சமூக இடைவெளி விதியை மீறுவோருக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது

கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒருவருக்கொருவர் குறைந்த பட்சம் 1 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் இது மிகவும் கடைபிடிக்கபட்டு வருகிறது.

பொது இடங்களில் ஒரு மீட்டர் தூரத்தை கடைப்பிடிக்காதவர்கள் அல்லது ஒரு மீட்டர் இடைவெளி விடாமல் அமர்பவர்கள் குற்றம் புரிந்ததாகக் கருதப்படுகிறார்கள்.

இவ்வாறு நடந்துக் கொள்வோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் 10000 டாலர் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இந்த சட்டம் நேற்று முன் தினம் அதாவது 26 ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.